தாராபுரம்


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் வட்டம் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை நகராட்சியும் ஆகும். இந்நகரத்தில் அமராவதி ஆறு பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று.விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்தது அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில் தாராபுரம் , காங்கேயம் வட்டங்கள் இதில் அடங்கும்.காற்றாலைகள் மிகுந்த நகரம்.தென்னை,பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராக திகழ்கிறது.தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்யபடும் நகரங்களில் ஒன்று.

சட்டமன்ற தொகுதி


திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று தாராபுரம் (தனி) தொகுதி. திருப்பூர் மாவட்டத்தில் 2-வது தனித்தொகுதி.

இத்தொகுதி, தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டு 56 ஆண்டு கடந்துவிட்டது. விவசாயத்தை மட்டுமே முக்கிய தொழிலாக கொண்டது இப்பகுதி. அதிக அளவில் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் கறி கோழி உற்பத்தி தொழில் பல குடும்பங்களை வாழவைக்கிறது. அமராவதி ஆற்றுப் பாசனம் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது.